ஸ்கார்பரோ துப்பாக்கிச் சூடு: பெண்ணொருவர் படுகாயம்!

ஸ்கார்பரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக ரொறொன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) பிர்ச்மவுண்ட் வீதி (Birchmount Road) மற்றும் லாரா சௌகார்ட் வாக் (Laura Secord Walk) அருகே இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அங்கு சென்ற பொலிஸார் காயமடைந்த 30 வயதுடைய பெண் ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசரணைகளை ரொறொன்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.