ரொறொன்ரோ துப்பாக்கிச் சூடு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ரொறொன்ரோ டவுன்ரவுன் வோட்டர் பிரொன்ட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக நம்பப்படும் நான்கு சந்தேக நபர்களைத் தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சந்தேகநபர்கள் குறித்து தகவல்கள் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறு, பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

லேக் சோர் புஃளிவார்ட் மற்றும் போர்ட் யோர் புஃளிவார்ட் பகுதியில் அமைந்துள்ள கோரேனேஷன் பார்க்கில் (Coronation Park) இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.