புதிதாக பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்!

புதிதாக பாடசாலை செல்ல தயாராகும் பிள்ளைகளிற்கு, இலவச தேவைகளை வழங்கும் திட்டம், இம்முறையும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு தேவையான பொருட்கள், உணவு மற்றும் முடி வெட்டுதல் போன்ற சேவைகள் வறுமை எதிர்ப்பு ஆர்வலர் என அறிமுகப்படுத்தி கொண்ட டான் ஜோன்ஸ்ரொன் என்பவரால் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.

இதற்கமைய ஆறாவது ஆண்டில் தடம் பதித்த இந்த திட்டத்தின் ஊடாக, கிட்டத்தட்ட 2,100 பேர் பயனடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு எட்மன்டனில் இடம்பெற்ற இந்நிகழ்வு, புதிதாக பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு எதிர்வரும் ஆண்டும் வழங்கப்படுமென டான் ஜோன்ஸ்ரொன் தெரிவித்துள்ளார்.