கனடாவை விட்டுச் செல்ல விரும்பாத சவுதி மாணவர்கள்!

கனடாவில் தங்கி கல்வி பயிலும் சவுதி மாணவர்களை, அந்நாட்டு அரசு நாடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில், பெரும்பாலான மாணவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சவுதி மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு திரும்ப வேண்டும் என்ற காலக்கெடு கடந்த 31ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் கிட்டத்தட்ட மாணவர்கள், மீண்டும் தாய் நாடு திரும்புவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதோடு, கனடாவில் தங்கும் முயற்சியாக புகலிட கோரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால், கனடா குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமை விதிகள் பிரகாரம், கனடாவினால் விசா வழங்கப்பட்ட மாணவர்கள், அனுமதி செல்லுபடியாகும் வரை கனடாவில் படிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 8,000 இற்கும் மேற்பட்ட சவுதி மாணவர்கள் கனடாவில் தங்களது மேற்படிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கனடா தங்களது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகின்றதென குற்றம் சாட்டி, அங்குள்ள சவுதி மாணவர்களை திருப்பி அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.