துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இரு இளைஞர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் அனுமதி!

வடகிழக்கு ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரு இளைஞர்களில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (ஞாயிறுக்கிழமை) அதிகாலை மார்க்சிசிடு அவென்யூ மற்றும் ஷெப்பார்ட் அவென்யூ கிழக்கு பகுதியில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் 20 வயது மதிக்க தக்க இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இருப்பினும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்கள் இதுவரை தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.