கனடியத் தமிழ் ஊடகங்களிற்கு, கனடியத் தமிழர்கள் சார்பாக எனது தாழ்மையான மடல்!

கனடியத் தமிழ் ஊடகங்களிற்கு, கனடியத் தமிழர்கள் சார்பாக எனது தாழ்மையான மடல் !


ஊடகத்தின் பலம் என்பது, பல அணு குண்டுகளின் அதிர்வையும் விட, மக்கள் சக்தியை ஒரு குடையின் கீழ் கொண்டு வர வைப்பதே அதன் திறமை.

மக்களிற்காக, மக்களின் குரலாக சமநிலையில் நின்று கருத்தை சொல்வதே ஊடகத்தின் தார்மீக கடமையில் முக்கியமான அம்சம்.

தற்பொழுது, எம் தமிழ் இனம் முள்ளிவாய்க்கால் வரையும், மற்றும் சுனாமி அனர்தத்தாலும் சில லட்சம் உறவுகளை இழந்து நிற்கின்றோம். ஆனாலும், ஈழத் தமிழர்களாகிய எம் மக்களிற்கு சரியான தனிப்பட்ட சுயநலமற்ற வழிகாட்டிகள் இல்லாது, இன்று எல்லோரும் திரிசங்குவின் உலகத்தில் வாழ்கின்றோம்.  இது தான் யதார்த்தமான உண்மை.

ஆனால், எம்மவர்களை சரியான பாதையில் சரியான  ஆலோசனைகளை கொடுத்து நேர் பாதையில் பயணிக்க வைக்கக் கூடிய வல்லமை ஊடகத்திற்கே உரியது.

தமிழ் ஊடக நண்பர்களிடம் எனது தாழ்மையான வேண்டுகோள், நீங்கள் உங்களின் தனிப்பட்ட வியாபார யுக்திகளை பயன்படுத்தி பணத்தை சம்பாதியுங்கள்.  ஆனால், குறைந்த பட்சம் மக்கள் சார்ந்த பொது விடையங்களில் ஊடகமாகிய நீங்கள், ஒரு குடையின் கீழ் நின்று குரலை எழுப்பும் போது மட்டுமே, மக்களிற்குள் தவறு செய்யும் சில அமைப்புக்களும் மற்றும் சில அரசியல்வாதிகளும் தாங்கள் செய்யும் தவறுகளை முழுமையாக திருத்திக் கொள்வார்கள்.  இல்லாவிட்டால், அவர்களின் தனிப்பட்ட சுயநல ஆணவம் மக்களிற்கு எதிராகப் போய் கொண்டே இருக்கும்.  இது எதிர்கால எம் சமூகத்திற்கு சிறந்ததல்ல !

சிந்தியுங்கள் செயற்படுங்கள்.  ஊடகத்துறையை மக்கள் முழுமையாக நம்பும் காலம் விரைவில் வரும் 

உங்களின் நண்பன்,
பரா(கனடா)