பிறப்பு உரிமை குடியுரிமை விடயத்திற்கு கன்சர்வேட்டிவ் கட்சி கடும் எதிர்ப்பு!

கனடாவில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள, ‘பிறப்பு உரிமை குடியுரிமை’ விடயத்திற்கு கன்சர்வேட்டிவ் கட்சி, கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.


கனடாவைச் சேராத கர்ப்பிணிப்பெண்கள் குழந்தைக்கு கனேடிய குடியுரிமை பெறும் நோக்கத்துடன் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக கனடாவுக்கு வருவது ‘பிறப்பு உரிமை குடியுரிமை’ ஆகும்.

கனடா மண்ணில் பிறந்ததால் குடியுரிமை என்னும் இந்த நடைமுறைஇ கடந்த 1947ஆம் ஆண்டு முதல் கனேடிய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டதிலிருந்தே நடைமுறையில் உள்ளது.

அதிலிருந்தே கனடாவில் பிறக்கும் எந்த குழந்தையும், தூதரக அதிகாரிகளின் குழந்தைகள் தவிர்த்து, தானாகவே கனடா குடிமகனாக ஆகிவிடுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி போர் கொடி உயர்த்தியுள்ளது.

மருத்துவ உதவி மற்றும் கல்வி போன்ற சலுகைகள் இந்த குழந்தைகளுக்கு வழங்கப்படுவதோடு, அந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது தங்கள் பெற்றோர் கனடாவுக்கு புலம்பெயர அவர்களுக்கு அனுசரனை வழங்கலாம்.

இதனால், பெற்றோர்கள் கனடாவில் குடியேற வேண்டும் என்ற நோக்கத்திற்காக, தங்களது பிள்ளைகளை கனடாவில் பிரசவித்துக்கொள்ள அதிகம் விரும்புவதாக கூறப்படுகின்றது.