ஒன்ராறியோ அரசாங்கம் வசமாக போகும் ரொறொன்ரோ சுரங்கபாதை!

ரொறொன்ரோ சுரங்கபாதை அமைப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முதற்படியில், ஒன்ராறியோ அரசாங்கம் காலடி எடுத்து வைத்துள்ளது.

இதற்கமைய, இந் நடவடிக்கை குறித்து சிறந்த அணுகு முறையை நாடுவதற்கு ஆலோசனை குழுவொன்றை முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி அரசாங்கம், நியமித்துள்ளது.

இந்த ஆலோசனை குழுவில், மைக்கல் லின்செ மற்றும் மூன்று நிபுணர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பிராந்திய போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதென முதல்வர் டக் வோட் இலையுதிர் கால தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார்.

ரொறொன்ரோ சுரங்க ரயில் சேவை அமைப்பை மாகாணத்துடன் பதிவேற்றம் செய்வது நகரத்திற்கு பயனளிக்குமென தெரிவித்திருந்தார். இதற்கமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.