அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பிற்கான, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை என பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. சபையின் பொதுக் கூட்டத்தின் ஒரு அங்கமாக இச்சந்திப்பிற்கு கனேடிய பிரதமர் அழைப்பு விடுத்திருந்ததாகவும், அமெரிக்க ஜனாதிபதி அதனை நிராகரித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த சந்திப்பிற்கான எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம் விடுத்த அறிக்கையிலேயேRead More →

மியான்மர் தலைவர் ஆங் சான் சூகியின் குடியுரிமையை ரத்து செய்வதற்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக வாக்களித்துள்ளனர். ரோஹிங்கியா சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த மியான்மர் தலைவர் தவறிய நிலையிலேயே கனடா இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது. ஆங் சாங் சூகி தொடர்ந்தும் கௌரவ குடியுரிமைக்குத் தகுதியானவராக உள்ளாரா என்று கேள்வி எழுப்பிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சூகிக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ குடியுரிமையை ரத்து செய்வதால் பௌத்தRead More →

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் மீது தான் மிகுந்த மதிப்பு கொண்டுள்ளதாக, கனடாவிற்கான அமெரிக்க தூதுவர் கெலி க்ராஃப்ட் தெரிவித்துள்ளார். நஃப்டா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் கிறிஸ்டியா ஃப்ரீலண்டின் பேச்சுவார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருந்த நிலையிலேயே கெலி க்ராஃப்டின் இக்கருத்து வெளியாகியுள்ளது. மேலும் தெரிவித்த அவர், ”ஃப்ரீலண்ட் தனிப்பட்ட ரீதியில் உண்மையில் மிகவும் உதவி செய்யும் நபர். பேச்சுவார்த்தைகளின் போதான ப்ரீலண்டின் நன்னடத்தை அமெரிக்க தரப்பினரால் வெகுவாகRead More →

குளிர் காலநிலை காரணமாக எட்மன்டன் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் இருக்கும் பனிக்கட்டிகளை நீக்க கல்சியம் குளோரைட் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதில் நிலவும் குளிர் காலநிலை நிலை காரணமாக அதன் வீதிகள்,பாலங்களில் பனிக்கட்டிகள் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் அதனை அகற்றுவதற்கான ஒரு முயற்சியாகவே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக நகரசபை தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம், இந்த திட்டத்தின் மூலம், இந்த குளிர்காலத்தில் கல்சியம் குளோரைடு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்கவும்,Read More →

கனடாவில் குழந்தை பிரசவத்திற்கு முன்பாக மூன்று மாதங்கள் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்புதிய திட்டத்தினால் மேலதிகமாக 24,000 பெற்றோர்கள் நன்மை பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய குடும்பங்கள், பிள்ளைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் Jean-Yves Duclos, நேற்று முன்தினம் (புதன்கிழமை) இதனை அறிவித்துள்ளார். இதற்க்கு முன்னர் பெண்களுக்கு குழந்தையை பெற்றுக்கொண்ட பின்னரேயே விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின் படி குழந்தை பெற்றுக்கொள்வதற்கு 3 மாதங்கள் முன்னரும்Read More →

ரொறொன்ரோவில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தை அடுத்து வெளியேற்றப்பட்ட 1500 குடும்பங்களும் அடுத்த ஆண்டளவில் மீண்டும் மீள்குடியமர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தெரு பகுதியில் உள்ள குறித்த குடியிருப்பு கட்டடத் தொகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி மேற்படி விபத்து சம்பவித்திருந்தது. அதனை தொடர்ந்து குறித்த குடியிருப்பில் வசித்துவந்த சுமார் 1500 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தீ அனர்த்தம் ஏற்பட்ட குடியிருப்பு கட்டடத்தின்Read More →

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பிற்கான, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. சபையின் பொதுக் கூட்டத்தின் ஒரு அங்கமாக இச்சந்திப்பிற்கு கனேடிய பிரதமர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி அதனை நிராகரித்துள்ளார். வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தை மோசமான நிலையில் காணப்படுகின்ற நிலையிலேயே இப்பேச்சுவார்த்தைக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துRead More →

வெனிசுவேலா மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று கனடா மற்றும் சில லத்தின் அமெரிக்க நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு தனது அழுத்தத்தை பிரயோகிப்பது தொடர்பாக வெனிசுவேலா அரசாங்கம் மீது குறித்த நாடுகள் நேற்றைய தினம் (புதன்கிழமை) தமது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன. நெதர்லாந்தின் ஹேக் நகரை தளமாக கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் சக அங்கத்துவRead More →

79 வயதுடைய முதியவர் ஒருவரை வாகனத்தால் மோதிவிட்டு வாகனத்துடன் தப்பிச்ச சென்ற சந்தேகநபரை ரொறொன்ரோ பொலிஸார் தேடிவருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணிக்கு கிழக்கு ஷெப்பார்ட் அவென்யூ மற்றும் பிர்ச்மவுன் வீதியில் உள்ள அன்கன்கோர்ட் மோல்ற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், படுகாயமுற்று உயிருக்கு அப்பத்தான நிலையில் இருந்த முதியவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும் விபத்தை ஏற்படுத்தியவர் தப்பிRead More →

எட்டோபிகோக் நகரின் மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிட தொகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்ததாகவும், மற்றுமொருவர் சிறுகாயங்களுடனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரொறொன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற பொலிஸார் அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதில் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய முதலாவது ஆண் நபர்Read More →