ஸ்கார்பரோ பகுதி துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

வார்டன் அவனியூ பகுதிக்கு அருகே வடக்கு டன்போர்ட் வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் குறித்த இளைஞர் மீது பல முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.