நஃப்டா உடன்பாடு இன்று முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

நஃப்டா எனப்படும் வட அமெரிக்க வர்த்தக உடன்பாடு தொடர்பில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இது தொடர்பில் நேரடியாக மிகவும் தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையிலேயே இது தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் விபரம் வெளியிட்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிரிஷ்டியா ஃபிரீலான்ட் , அதிகாரிகள் இரவிரவாக பணியாற்றி வருவதாக கூறினார்.

இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரண்டு நாடுகளின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர்களும் ஆராயவுள்ளதாகவும், பல்வேறு விடையங்களை மிகவேகமாக செய்து முடிக்கவேண்டிய தேவை உள்ளதாகவும் கிரிஷ்டியா ஃபிரீலான்ட் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.