புதிய வட அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை: வெள்ளிவரை கால அவகாசம்!

அமெரிக்கா-மெக்சிக்கோ- கனடா ஆகிய மூன்று நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கனடாவிற்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

புதிய வட அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற தருணத்தில் கனடாவிற்கு இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாட்களாக இந்த சர்ச்சை தொடரும் நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஒப்பந்தம் தொடர்பில் இறுதி நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா கோரினால், எவ்வாறு எதிர்கால நகர்வுகளை பற்றி கருத்திற்கொள்ளாது இதற்க்கு உடன்பட முடியும் என கனடா தரப்பில் இருந்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை கனடாவின் வௌிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலேன்ட், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ரொபர்ட் லைட்டிஷருக்கு ஆக்கபூர்வமாக கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ள அதே சமயம், குறித்த விடயம் தொடர்பில் வோஷிங்டனில் உள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்திற்கு சென்று கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.