ரயில்வே கடவைகளை பாதுகாப்பானதாக மாற்ற 3 மில்லியன்களை வழங்கும் மத்திய அரசு!

ஆல்பர்ட்டா ரயில்வே கடவைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு 3.3 மில்லியன் டொலர்களை மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

குறித்த நிதியில் தடை, ஒளிரும் விளக்குகள் மற்றும் மணிகள் உட்பட மாகாணத்தில் 18 திட்டங்கள் சீர் செய்யட்டப்படும் என கனடா போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் 77 புகையிரதம் மூலமான உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ள நிலையில், அதில் 5 உயிரிழப்புக்கள் பாதுகாப்பு கடவையில் அத்துமீறி பிவேசித்தல் மூலம் நிகழ்ந்துள்ளதாக போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறு பல உயிரிழப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில், ரயில் பற்றிய பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் முகமாக, எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.