இந்திய வம்சாவளி தொழிலதிபருக்கு 1.2 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு

இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவருக்கு 1.2 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “கனடாவில் போதை மருந்து மற்றும் ஆயுதம் கடத்தலில் இந்திய வம்சாவளி நபர் ஒருவர் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கனடாவில் குடியிருப்பவர் இந்தியா வம்சாவளி தொழிலதிபர் அல்தாப் நஷ்ரேலி. அவர், 2016-ம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றதில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அந்த வழக்கில், `ஒன்லைன் விற்பனையாளர் பேட்ரிக் பைரைன், தன்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டீப்கேப்சர் (deepcature) இணையத்தளத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்தே தாம், போதைப்பொருள் கடத்துபவர், ஆயுதங்கள் கடத்துபவர் போன்று தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தச் செய்தி மார்க் மிட்சேல் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. அந்த இணையத்தளத்திற்கு பைரேன்தான் உரிமையாளர்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில், அல்பாப் நஷ்ரேலிக்கு 1.2 மில்லியன் டொலர் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கனடா உச்ச நீதிமன்றத்தில் இணையத்தள உரிமையாளர் பைரேன் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த வாரம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பைரேன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, கொலம்பியா நீதிமன்றத் தீர்ப்பை கனடா உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.