கனடாவில் அதிகரிக்கும் போதைப்பொருள் கொள்வனவு!

கனடாவின் வருடாந்த செலவு அறிக்கைக்கு இணங்க, கடந்த ஏப்ரல் மாதத்திற்கும் ஜுன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கனேடிய மக்கள் போதைப் பொருட்களை கொள்வனவு செய்ய 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்துள்ளனர்.

குறித்த கணக்கீட்டுத் தொகையானது, சட்ட ரீதியான மற்றும் சட்டவிரோதமான இரு கொள்வனவுகளின் கூட்டுக் கணக்கெடுப்புத் தொகையாகும்.

சட்டரீதியான போதைப் பொருட்கள் மருத்துவ தேவைகளுக்காக பயன்டுத்துவதாகும்.

மொத்த கொள்வனவில் சட்டவிரோதமானது 85 சதவீதமானதாகும். அதாவது 4.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த சட்டவிரோத போதைப்பொருள் கொள்வனவு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை குறித்த கொள்வனவு வீதம் மூன்று மாதங்களுக்குள் 1.2 சதவீத அதிகரிப்பையும் கண்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதியிலிருந்து பொழுது போக்குக்காக போதைப் பொருட்களைப் பயன்படுத்தப்படும் முகமாக கொள்வனவு செய்யும் நடவடிக்கையினைச் சட்டபூர்வமாக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கனடாவில் மருந்துப் பொருட்களுக்கான விலை வீழ்ச்சியடைந்துள்ளதைத் தொடர்ந்து, குறித்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.