விமானத்தின் பழமை வாய்ந்த சிதைவுகள் கண்டுபிடிப்பு!

பழமை வாய்ந்த விமானம் ஒன்றின் சிதைவுகள் ஒன்ராறியோவின் கடல் ஆழத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.


கடலுக்கு அடியில் விமானத்தின் மேலும் பல எச்சங்கள் இருக்கலாம் என மீட்பு குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Avro Arrow என நம்பகூடிய மாதிரி ஒன்றை சுழிலோடிகள் கடந்த வாரம் பிரின்ஸ் எட்வேட் கவுன்ரியில் தரைக்கு கொண்டு வந்து பின்னர் கனடா விண்வெளி மற்றும் அருங்காட்சியகத்திற்கு  கொண்டு சென்றுள்ளனர்.

Avro Arrow முதல் மற்றும் ஒரே ஒலியை விட விரைவாக செல்லும் உளவு விமானம் கனடாவில் செய்யப்பட்டதாகும். 1950ன் மத்திய பகுதியில் இந்த விமானங்கள் உருவாக்கப்பட்டன.

குறித்த விமானங்கள் 1954 இற்கும், 1957 இற்கும் இடைப்பட்ட காலத்தில் லேக் ஒன்ராறியோவிற்கு மேலாக சோதனைக்காக விடப்பட்டதாக கூறப்படுகின்து.

எனினும், 1959ல் இந்த Arrow திட்டம் திடீரென இரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.