டான்ஃபோர்ட் துப்பாக்கிச் சூடு: மற்றுமொரு சந்தேகநபரை தேடும் பொலிஸார்!

டான்ஃபோர்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேக நபரை ரொறொன்ரோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு பொலிஸார், சம்பவ இடத்தில் வந்த போது,35 வயதுடைய Danny Morales என்பவர் தலையில் சுடப்பட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்று சிறிது நேரம் கழித்து, இரு கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபரையும் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.