வன்கூவர் பகுதியில் 4.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

வன்கூவர் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 4.6 ரிச்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக கனடா புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் கீழ்பகுதியில், போர்ட் ஹார்டிக்கு மேற்கே சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் அந்த இடத்திருக்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்றும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பூகம்பங்கள் பதிவாகின்றது. இதில் 1 ஆயிரக்கணக்கிலேயே நிலநடுக்கங்களை மேற்கு கனடாவில் ஏற்படுகின்றது. ஆனால் அதில் 50 மட்டுமே மக்களால் உணரப்படுவதாக கனடா புவியியல் மையம் தெரிவித்துள்ளது.