டிரம்ப்பின் ஆட்சியில் அதிகளவானோர் கனடாவிற்கு குடிப்பெயர்வு

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்று முதல் ஒன்றரை வருடத்தில் கனடாவுக்கு குடிபெயர்ந்து சென்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை மத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2017ஆம் ஆண்டு மற்றும் 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 1,055 அமெரிக்கர்கள், கனடாவில் நிரந்தர வதிவிட அனுமதியை பெற்றனர். இது ஒபாமாவின் நிர்வாக காலத்தின் சராசரி எண்ணிக்கையை விட அதிகமாகும்.

அதேவேளை, 2017ஆம் ஆண்டில் 1,012 அமெரிக்கர்களுக்கு மாணவர் வீசா அனுமதிகள் வழங்கப்பட்டன. கடந்த எட்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

இந்த நடவடிக்கையில் அரசியலைத் தவிர வேறு காரணிகள் இருக்கலாம் என்றும், ஆங்கில மொழி அறிவு மேலதிக புள்ளிகளை பெறுவதற்கு வழிவகுக்கும் எனவும் அமெரிக்க குடிப்பெயர்வாளர்களுக்கு ஆதரவான டொரொன்டொவின் குடிவரவு சட்டவியலாளர் கைடி மம்மான் (Guidy Mamann) தெரிவித்துள்ளார்.