டான்ஃபோர்டில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

டான்ஃபோர்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சந்தேகநரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (புதன்கிழமை) அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு பொலிஸார், சம்பவ இடத்தில் வந்த போது தலையில் சுடப்பட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

இதில் உயிரிழந்தவர் 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்த அதேவேளை, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது  டான்ஃபோர்ட் அவென்யூ மூடப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் ஒரு மதத்திற்கு முன்னர் குறித்த பகுதியில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.