Georgian Bay இல் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

Georgian Bay பகுதியில் நண்பர்களுடன் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

Wasaga கடற்கரைப் பகுதியில் இருந்து வடக்கே உள்ள Bluewater கடற்கரைப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கிய குறித்த நபர் மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டதுடன், உடனடியாக மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அங்கு சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, ரொரன்ரோவைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும், அவரது பெயர் உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒன்ராறியோ மாகாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.