மீண்டும் தேர்தல் களத்தில் ஜஸ்டின் ட்ரூடோ!

கனடாவின் 43 ஆவது பொது தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சி நிகழ்வில் லிபரல் தலைவர் இதனை அறிவித்துள்ளார். அத்துடன் அவர் மொன்றியல் பகுதியில் உள்ள பாபினோ தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவார் என கூறியுள்ளார்.

“பிரதமராக பதவியேற்ற பின்னர், கனடாவின் சமுத்திரங்களை பாதுகாக்கும் பல சவால்களை சமாளிக்க உறுதியளித்த ட்ரூடோ, சுதேசிய மக்களுக்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் இடைவெளியைக் குறைத்தார்” என லிபரல் தலைவர் கூறினார்.

மேலும், இதற்கு முன்னர் 2008 இல் பாபினோவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முதன் முறையாக போட்டியிட்டார். பின்னர் 2011 இல் போட்டியிட்டிருந்ததுடன் மீண்டும் 2015 ஆம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றிபெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.