கொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்!

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இரங்கல் வெளியிட்டுள்ளார்.


இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,

80 வயதான கொஃபி அணான் உலகினை சிறந்த இடமாக மாற்றி அமைத்துள்ளார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் கொஃபி அணானின் எண்ணத்தினையும் செயல்களையும் தொடர்ந்து முன்னெடுத்து, உலகில் மேலும் மேலும் அமைதியை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியது நம் அனைவரது கடமை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கொஃபி அணான் கனடா மீது அளவு கடந்த பாசமும் அன்பும் இருந்ததாகவும், ஒவ்வொரு முறையும் அவர் கனடா வரும்போது அது தெளிவாக தெரிந்தது என முன்னாள் கனேடிய பிரதமர் போல் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

உலகமயமாக்கலுக்கு உட்பட்டுள்ள இந்த பன்னாட்டு அரங்கில் பல் மொழி, பல் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்திச் செல்வதற்கான சிறந்த தலைமைத்துவத்தினை அவர் வழங்க வந்ததாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.