கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்!

டொரண்டோவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

டொரண்டோவிலுள்ள கிப்லிங் அவன்யூ மற்றும் டிக்சன் சாலையில் நேற்று(சனிக்கிழமை) மாலை இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்து இலக்கான பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றுமொரு பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என வைத்தியசாலை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.