டொரோண்டோ டவுன்டவுனில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் வைத்தியசாலையில்!

டொரோண்டோ டவுன்டவுன் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த விபத்தானது Yonge மற்றும் இசபெல்லா தெரு பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தகவலறிந்து, குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார், படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்களையும் வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், சம்பவத்திற்கான காரணங்களை இதுவரை வெளியாகவில்லை என்றும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.