கனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்!

கனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, புகழ்பெற்ற துரித உணவுச்சாலைகளின் கூட்டமைப்பாக கே.எப்.சி. கனடாவில் தமது பெயரை K’ehFC என பெயர் மாற்றம் செய்துள்ளது.

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்துவதுடன், அனைவரையும் ஒன்றிணைப்பதனை கனடா தினம் வெளிப்படுத்தி நிற்கிறது.

அதேபோன்று சமூகத்தினரிடையேயான ஒன்றிணைவையே கே.எப்.சி.யும் விரும்புகிறது என கே.எப்.சி.யின் சிரேஷ்; சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஸ்டீபன் ஸ்கரோ குறிப்பிட்டார்.

கனடாவில் கடந்த 1955ஆம் ஆண்டு சஸ்கடூனில் முதல்முறையாக திறக்கப்பட்ட கே.எப்.சி. உணவுச்சாலையில் தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கே.எப்.சி. மேலும் பல அசத்தலான விளம்பரங்களையும் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.