தமிழர் தெருவிழாவும், நடுத்தெருவில் நிற்கும் தமிழரும்!

டொரோண்டோ தமிழ் க்கு வந்த வாசகர் கடிதம். வெளியீட்டுக்கு ஏற்ற வகையில் சில பகுதிகள் தவிர்க்கப்பட்டுள்ளது.

கனடியத் தமிழ் காங்கிரஸ் (CTC) அமைப்பினரால் ஒவ்வொரு வருடமும் TORONTO நகரத்தில் நிகழ்த்தப்படும் பிரமாண்டமான “பண வசூல் வேட்டை” விழாவான “தமிழர் தெருத் திருவிழா” !

இதன் முக்கிய நோக்கமே, தமிழர்களின் கலாச்சாரத்தை மற்றைய இனத்திற்கு தெரியப்படுத்துவதாக கூறிக் கொண்டு ஒரு தலைப்பட்சமாக லிபரல் (Liberal Party) கட்சிக்கான பிரச்சாரமும் செய்து, மக்களின் பணத்தை வசூலிக்கும் விழா தான் CTCயின் “தமிழ் தெரு விழா” !

இது ஒரு பொது விழாவாக நடத்துவதற்கு மட்டும் தான் CTC அமைப்பினருக்கு TORONTO நகரசபை அனுமதி கொடுத்து வருகின்றார்கள்.  அதன் அடிப்படையில் CTC அமைப்பினர் TORONTO நகரசபையிடமும், ONTARIO மாகாணசபையிடமும், மற்றும் கனடிய மத்திய அரசிடமும் உதவியை பெற்று வருகின்றார்கள்.

ONTARIO மாநிலம் கடந்த வருடம் (2017) $40,000 டொலர்கள் கொடுத்துள்ளார்கள்.  நகரசபையிடமும் மற்றும் மத்திய அரசிடமும் பெற்ற தொகை அல்லது அதற்க்கு ஈடான உதவிகள் அதிகம் அதிகம் !

ஆனால், CTC அமைப்பில் இருக்கும் 200 வரையான உறுப்பினர்களிற்காக மாத்திரம் இந்த அரசுகள் எதையும் செய்ய வில்லை.  அவர்கள் செய்வது கனடாவில் இருக்கும் 4 லட்சம் தமிழர்களிற்காக தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள்.

ஆகையால், இந்த விழாவை நடத்துபவர்கள் வெளிப்படைத் தன்மையோடு வருடம் வருடம் கணக்காய்வு செய்து பொது வெளியில் மக்களின் பார்வைக்கு கணக்குகளை தெரியப்படுத்த வேண்டும்.  ஆனால் இந்த நிகழ்வினால் ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் $500,000 டொலர்கள் யாருடைய பாதாள பெட்டிக்குள் போகின்றதென்பதையும் மக்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த வருடம் வரப்போகும் TORONTO நகரசபை தேர்தலில் போட்டியிடும் நண்பர் “நீதன் சாண்” அவர்கள் இந்த தனியார் நிகழ்வை பொது நிகழ்வாக மாற்றியமைப்பேன் என்ற வாக்குறுதியை மக்களிற்கு கொடுத்து, தேர்தலை சந்தித்தால் சிறப்பாக அமையுமென்பதை மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன் !

இதில் கிடைக்கும் இலாபத்தில் கனடாவிலும் மற்றும் தமிழர் வாழும் நாடுகளிலும் மக்கள் சார்ந்த பொதுத் திட்டத்திற்கு உதவிகளை செய்தால், யாருக்கும் எந்தவொரு இடியப்ப சிக்கலுமில்லை !

இந்த நிகழ்வில் ஒட்டு மொத்த தமிழர்களின் பெயரால் பிரதமரை கூப்பிட்டு கொத்துரொட்டி போட வைக்கும் CTC அமைப்பினர், எம் உறவுகள் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி கப்பலில் வந்து கனடாவில் தஞ்சம் புகுத்தவர்களிற்கு அகதி அந்தஸ்ட்டு பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள் தான் தமிழர்களிற்காக கனடாவில் அரசியல் செய்யும் CTC அமைப்பினரோ?

கனடியத் தமிழர்களே விழித்தெழுங்கள், மக்களை வைத்து தமிழ் மக்கள் பெயரால் ஏமாற்றும் அமைப்புக்களை சந்தியில் வைத்து கேள்வி கேளுங்கள்.  மக்களின் பெயரால் தமது வயிறு வளர்ப்பவர்களை அனுமதிக்காதீர்கள்.!

உங்கள் நண்பன்,
பரா  (கனடா)