வீட்டு வசதியை அடிப்படை உரிமையாக பிரகடனப்படுத்துமாறு ட்ருடோவிற்கு வலியுறுத்தல்!

வீட்டு வசதி என்பது கனேடிய சட்டத்தின் கீழ் அடிப்படை மனித உரிமையாக பிரகனப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுமாறு பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோ அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

170இற்கும் மேற்பட்ட சிவில் சமுhதாய குழுக்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.

குறித்த குழுவினரால் பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், லிபரல் அரசாங்கத்தின் 10 ஆண்டு, 40 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தேசிய வீட்டு மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கு ஏற்படுத்தப்படவுள்ள சட்டத்தில் ‘சர்வதேச சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளபடி வீட்டு உரிமையை வெளிப்படையாக அங்கீகரிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய பிரகடனமற்ற சட்டமூலமானது தோற்கடிக்கப்பட வேண்டும் என கனடாவில் வீடற்ற நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கூட்டணியின் தலைவர் ரிம் ரச்டர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் தேசிய வீட்டுத்திட்ட மூலோபாயத்தை பிரதமர் வெளியிட்டிருந்தார். அதில் 2019 தேர்தலுக்கு பின்னர் வீடற்றவர்களுக்கான வீட்டுவசதி திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது இதுவரை பிரகடனப்படுத்தப்படாத நிலையிலேயே இச்சர்ச்சை ஏற்பட்டுள்ளது.