வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டியலில் கல்கரிக்கு 4 ஆவது இடம்!

2018 ஆம் ஆண்டுக்கான உலகில் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியலில் கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான கல்கரி, 4 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.


இப் பட்டியலானது, நிலையான தன்மை, சுகாதாரப் பராமரிப்பு, கலாசாரம், சுற்றுச்சூழல், கல்வி, உட்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டது.

அந்தவகையில் அதில் 140 தகுதிவாய்ந்த நகரங்ளுக்கான தர வரிசை வழங்கப்பட்டது. அதில் 97.5 சத விகிதத்தை பெற்று கல்கரி 4 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

அந்த பட்டியலில் முதலிடத்தில் 99.1 சத விகிதத்தை பெற்று ஓஸ்டிரியாவின் வியன்னா முதலாவது இடத்தையும், அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர் 98.4, ஜப்பானின் ஒசாக்கா 97.7 சதவீதத்துடனும் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது.

மேலும், கனடாவின் முக்கிய நகரங்களான வான்கூவர் 97.3, ரொறன்ரோ 97.2 சத விகிதங்களுடனும் 6 ஆவது மற்றும் 7 ஆவது இடங்களை பெற்று, முதல் 10 இடங்களுக்குள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் உலகில் வாழ்வதற்குகந்த முதல் 10 நகரங்களாக,

1. வியன்னா, ஓஸ்டிரியா

2. மெல்பர்ன், அவுஸ்திரேலியா

3. ஒசாக்கா, ஜப்பான்

4. கால்கரி, கனடா

5. சிட்னி, அவுஸ்திரேலியா

6. வேன்கூவர், கனடா

7. டோக்கியோ, ஜப்பான்

8. டொரோண்டோ, கனடா

9. கோப்பன்ஹேகன், டென்மார்க்

10. அடிலைட், அவுஸ்திரேலியா