சவுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கனேடியர் மூவர் கைது!

சவுதி அரேபியாவில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கனேடியர் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக The Saudi Gazette வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 நாடுகளை சேர்ந்த 999 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அதிகமான சந்தேகநபர்கள், சீனா, எரிட்ரியா, ரஷ்யா, இலங்கை, ஓமன், கிர்கிஸ்தான் மற்றும் கென்யா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏமனை சேர்ந்த 365 உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளுடன் தொடர்பு, தேசிய பாதுகாப்பில் தலையிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.