பிரிட்டிஷ் கொலம்பியாவின் 39 பகுதிகளில் தீப்பரவல் சம்பவங்கள் பதிவு!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் 39 பகுதிகளில் நேற்று(வெள்ளிக்கிழமை) புதிய காட்டுத்தீ பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


புதிதாக ஏற்பட்டுள்ள இந்த 39 காட்டுத்தீ பரவல் சம்பவங்களுடன் சேர்த்து, தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் 476 இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை காலப்பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,565 காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதனால் 1,180 சதுர கிலோமீடடர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக சுமார் 300 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவு எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.