சில்வன் ஏரி பகுதியில் வாகன விபத்து: குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு!

சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், இரு முதியவர்கள், ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நெடுஞ்சாலை 781 பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் SUV வாகனத்தில் பயணித்த 39 வயதுடைய ஆண் மற்றும் 5 வயதுடைய குழந்தை ஒன்றும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக றோயல் கனடியன் மவுண்டட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், டிரக் ரக வாகனத்தை ஓட்டிச்சென்ற 30 வயதான ஆணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் SUV வாகனத்தில் பயணித்த ஏழு வயதான சிறுவன், காயமடைந்த நிலையில் எட்மன்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை றோயல் கனடியன் மவுண்டட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.