கலைஞர் இறப்பு ஒரு செய்தி மட்டுமே. உணர்வுரீதியாக எந்தவொரு சோகத்தையும் ஏற்படுத்தவில்லை!

இன்று தமிழ் தமிழ் என்று தமிழனை நம்பவைத்து நாடகமாடி, தக்க சமயத்தில் தலையறுத்த கலைஞர், தனது குடும்பத்துக்கு சொத்தையும், பழியையும் சேர்த்துவைத்துவிட்டு இறந்துவிட்டார்.

முள்ளிவாய்க்கால்  இனவழிப்பின்  துரோகத்தின் பங்காளி கலைஞர் கருணாநிதி.

ஆனால், அவருக்கே உரிய அகடவிகட சாதுர்யத்தாலும், நஞ்சினை உள்ளே வைத்து, தேனினும் இனிய சொற்களை வர்ணனை ஆக்கி எழுதியும், பேசியும் வந்த சாமர்த்தியத்தாலும், அவர் தன்னைப்பற்றி மக்களிடம் உருவாக்கி வைத்து இருந்த நம்பிக்கையும், மதிப்பும், உலக தமிழர் மத்தியில் 2009 உடன் தரைமட்டமாகிவிட்டது.

Year 2010. Kanimozhi and Baalu honouring Mahinda Rajapaksa.

அத்தனையும் போலித்தனம், ஏமாற்று வேலை, கடைந்தெடுத்த பித்தலாட்டம் என்பதை, மக்கள் 2009 முள்ளிவாய்களுடனும், பின்னர் உலக  தமிழினத்தலைவரின் தாயார் பார்வதியம்மாள் துரித மரணத்திற்கு தள்ள காரணமாக இருந்த சென்னை விமான நிலைய நாடகமான திருப்பி அனுப்பியது என்பது உலக தமிழர்கள் மத்தியில் கழுவப்பட முடியாத ஒரு பெரும் கறையாக கலைஞருக்கு பதிந்துவிட்டது.

மகிந்த ராஜபக்ச தொடக்கம் வரிசையாக சிங்கள தலைவர்கள் கருணாநிதிக்கு நன்றிக் கடன் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். எல்லோரும் கூட்டு கொலையாளிகள்.

மேலும் தமிழக புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் எல்லாம் அவரை அன்னை தெரேசா, கார்ல் மார்க்ஸ் லெவலுக்கு புகழத் தொடங்கி விட்டார்கள்.

எனினும் தமிழநாடு தவிர்ந்த உலகின் எந்த பகுதிகளிலும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர் நாடுகளில் இது ஒரு செய்தியாகவே பார்க்கப்படுகின்றது. உணர்வு ரீதியாக எந்தவொரு சோகத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.

80 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் பட்டிதொட்டியெங்கும் தமிழால் பரந்த கலைஞர் இன்று ஒரு குடும்பச்சொத்தாக மற்றும் ஒரு கட்சியின் ஒரு தலைவராக மட்டுமே பார்க்கப்படும் இழி நிலை.

பாசத்தோடு நினைந்திருக்கவேண்டிய உறவு பதவி மோகத்திற்குள் சிக்கியதால் பரிதாபமாகிப் போனது!

உலகத் தமிழரின் தலைவனாகும் உன்னத நிலை இருந்தும் உணர்வில்லாமல் போனதனால் இந்நிலை.

தமிழுக்கு பலம் கொடுத்து தமிழர்களுக்கு துரோகம் செய்த கலைஞரை, சாகும் வரை உலக தமிழினம் கொண்டாடப்போவதில்லை.

மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் தமிழர்கள் ஒன்றும் மகான்கள் அல்ல. மனிதம் மறுக்கப்பட்ட மனிதர்கள்.