பிரம்டனில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் பலி

வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்றுபேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பிரம்டன் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

பிரம்டனுக்கும் வோனுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில், நெடுஞ்சாலை 50 மற்றும் Countryside Drive வீதிச் சந்திப்பில் நேற்று இரவு ஒன்பது மணியளவில், SUV ரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த உயிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

47 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்தின் போது படுகாயமடைந்த இரண்டு சிறுவர்கள் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் அவர்களும் உயிரிழந்து விட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர மேலும் இரண்டு பெரியவர்களும், ஒரு சிறுவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ள போதிலும், விபத்துக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்ல.