இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா -கவுன்சிலர் பதவியில் கொட்டிக்கிடக்கும் சலுகைகள்

இது தேர்தல் காலம். வாக்கு கேப்பவர் வாசலில் வருவர்.  வந்து நின்றொரு கும்புடு போடுவர்.  தாக்கு தாக்கென மற்ற வேற்பாளரை தாக்கி உங்கள் வாசலிலேயே சன்னதம் கொள்ளுவர்.

இதில் நிறைய முகங்களை நீங்கள் எந்த பொது, சமூக நிகழ்வுகளிலும் கண்டிருக்க வாய்ப்பில்லை.  இந்த தேர்தலில் தோற்றால் இனிமேலும் காணப்போவதில்லை.

தேர்தல் முடியும் வரை பகலில் உங்களால் நிம்மதியாக வீட்டில் உறங்க முடியாது, எந்த வேளையும் உங்கள் வாசல் கதவு தட்டப்படலாம்.  உங்கள் தொலைபேசி எவ்வேளையிலும் ஒலித்து உங்களை தொல்லைப்படுத்தும்.

எல்லாமே மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று மக்களுக்கு சேவை செய்யத்துடிக்கும் இந்த மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தே.  (சிலர் விதி விலக்கு)

இதில் சில வேட்பாளர்கள் ஒரு படியல்ல, பலபடிகள் மேலேசென்று தாங்கள் வந்தால் தமிழீழமே பெற்று தருவதாக சொல்லுபவர்களும் இருக்கின்றார்கள். சிலர் தாங்கள் கொண்ட கொள்கைகளை கூட தேர்தலுக்கு சிலநாட்களுக்கு முன்பாக தேர்தல் வெற்றிவேண்டி மறுதலித்தவர்களையும் பார்த்திருப்பீர்கள்.

சரி விடயத்துக்கு வருவோம்,

மாநகரசபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னரே பல முரண்பாடுகளும், அரசியல் போட்டியும் நிலவி வருகிறது.

இவ்வாறான சூழல் ஏன் நிலவுகிறது..? அப்படி என்ன இருக்கிறது..? எதனால் பதவிக்கு இப்படி முட்டலும், மோதலும் நடக்கிறது

மக்கள் வரிப்பணம் எப்படி வீணடிக்கப்படுகின்றதென மறைந்த முன்னாள் நகர முதல்வரின் துணிசலான வாக்குமூலம்.

ஏன் இந்த போட்டி? ஏன் இந்த மோகம் எல்லாமே சலுகை சலுகை சலுகை.

கடந்த ஜனவரி 2017 நவம்பர் 1ல் இருந்து டொரோண்டோ மேயருக்கு ஆண்டுக்கு $188,544.00 ஊதியமும் மற்றும் இதர படிகளும் வழங்கப்படுகிறது.

அதேபோல கவுன்சிலருக்கு , $111,955 ஊதியமும் மற்றும் இதர படிகளும் வழங்கப்படுகிறது.   வாரத்துக்கு $1500 வரை ஊதியம் மட்டும் பெறுகின்றனர்.

இது போக மேலும் கிடைக்கும் சலுகைகள்; (சகலதும் மக்களின் வரிப்பணம்).

 • 60 வயதுக்கு பின்பு ஓய்வுதியம், அவர் அவர் இறந்து விட்டாலும் துணைக்கு ஓய்வூதியம்.
 • நீடித்த உடல் நல காப்பீடு Level 2 வரை.
 • பல்சிகிச்சை Level 3 வரை.
 • உடல் நல சிகிச்சை
 • இலவச பொது போக்குவரத்து.
 • எதிர்பாரா விபத்து செலவுகளுக்கு $3000
 • துணைக்கு $400,000 அளவிலான ஆயுள் காப்பீட்டு திட்டம்
 • சொந்த வாகனத்துக்கு செலவிட வருடம் $9,400.
 • நகரம் முழுவதும் பார்க்கிங் இலவசம்.
 • Free Toronto Zoo Entrance & Parking for family
 • Free Casa Loma Entrance & Parking for family
 • Free Golf
 • Board of Trade Membership free
 • இதர செலவுகளுக்கு $14,000
 • பயண செலவுகளுக்கு $10,000
 • அலுவலகம் உள்ளிட்ட செலவுகளுக்கு $287,000. (அலுவலக வாடகை மற்றும் தனக்காக 4 வரையான உதவியாளரை வைத்திருக்கலாம்)

மேலும் சலுகைகளுக்கு, மேலுள்ள வீடியோவை பார்க்கவும் 

இவ்வாறு சலுகைகள் கொட்டிக்கிடைக்கிறது இந்த நகர சபை பதவியில், இதனால் தானோ என்னவோ உணர்வுகளையும் மீறி பதவியை அடைய துடிக்கிறது அரசியலில் ஊறிப்போன அரசியல்வாதிகளின் மனதும் எனக்கு இது கிடைக்காதோ என்று எங்கும் மனங்களும்.

நிகழ்வுக்கு அழைத்து மாலை போட்டதும் பாராட்டு பத்திரம் பெற்று விழா நடத்தியதும் போக இதுவரை யார் யார் உங்கள் பகுதி கவுன்சிலரிடம் ஏதாவது உதவி பெற்றுள்ளீர்கள்?  அல்லது அவர் என்ன செய்கின்றார் என அறிந்து வைத்துள்ளீர்கள்?

இதையெல்லாம் பார்க்கும்போது ஒண்டாரியோ அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 47 கவுன்சிலரில் இருந்து 25 ஆக ஆக்கும் முயட்சியில் எவ்வித தவறும் இருப்பதாக தெரியவில்லை.

சகலதும் மக்களின் வரிப்பணம் இப்படி வீணடிக்கப்படுகின்றது.