கல்கரியில் விமான விபத்து: இருவர் பலி

கல்கரியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை கல்கரியின் தென்மேற்கே உள்ள மலைப்பாங்கான பகுதியில் இடம் பெற்றுள்ள அந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக கனேடிய மத்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அந்த விமானம் இரண்டு இயந்திரங்களைக் கொண்ட சிறிய விமானம் என்றும், அதில் இரண்டு பேரே பயணம் செய்த நிலையில், அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாகவும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

கல்கரியில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த விமானம் அந்த பகுதியில் இருந்த மலை முகடு ஒன்றுடன் மோதுண்டு, அங்கிருந்து கீழ்நோக்கி உருண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த விமானத்தில் இருந்தவர்கள் நில வரைபட பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.