வல்வைப் படுகொலையின் ஆறாவடு

வல்வை படுகொலையின் 29 ஆவது நினைவு தினம் இன்றாகும்.

இந்திய அமைதிகாப்புப் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொலை செய்தார்கள்.  யாழ்ப்பாணம் மருத்துவமனைப் படுகொலை, இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த பாடசாலைகள் மீதான தாக்குதல்கள், சாவகச்சேரி சந்தையின் மீதான வான் தாக்குதல் என்று பலர் கொல்லப்பட்ட பாரிய படுகொலைகள் பலவும் அவர்களால் புரியப்பட்டன.

ஆனால் இன்று திட்டமிட்ட முறையில் சகலதும் இந்திய அரசாளும், தூதரகங்களாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு, மறக்கடிக்கப்படுகின்றன என்பதே நிதர்சனம். யாழ் மருத்துவமனை படுகொலை வைத்தியசாலைக்குள் மட்டும் ஊழியர்களால் சிறியமுறையில் அஞ்சலி நிகழ்வாக நடைபெறுகின்றது.

ஆனால், வல்வெட்டித்துறைப் படுகொலை, இந்திய அமைதிகாப்புப் படையினர் புரிந்த மிக மோசமான படுகொலைகளில் ஒன்றாகக் கருதப்படக் கூடியது.

தமது சகாக்கள் கொல்லப்பட்டமையால் உணர்ச்சி வசப்பட்ட இந்தியப் படையினர் மேற்கொண்ட படுகொலையாக இதைக் கருத முடியாது. ஏழு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு, இந்தியப் படைகளின் உயர் மட்ட அதிகாரிகளின் இணக்கத்துடனேயே இந்தப் படுகொலை மேற்கொள்ளப்பட்டதென்று நம்புவதற்குக் காரணங்கள் உள்ளன.

அதற்கான காரணங்கள்

1. 1989 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆந் திகதி வல்வெட்டித்துறைக்கும் பொலிகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்தியப் படையினர் மீது இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்து, வல்வெட்டித்துறையில் இருந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் இந்தியப் படைகளால் அடித்து நொருக்கப்பட்டார்கள். அவ்வாறு அடித்து நொருக்கப்பட்டு வல்வெட்டித்துறை சந்தி வரை அழைத்துச் செல்லப்பட்ட மக்களிடம் இந்தியப் படைப் பொறுப்பதிகாரி கூறியது ‘மீண்டும் இந்தியப் படையினர் தாக்கப்பட்டால் வல்வெட்டித்துறையை முற்றாகத் தரைமட்டமாக்கிவிடுவோம்’ – இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையிடம் அந்தவேளையிலேயே சத்தியக்கடதாசிகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

அன்று காயப்படுத்தப்பட்ட மக்களால் வல்வெட்டித்துறை வைத்தியசாலை நிறைந்து, மேலதிக காயப்பட்டோர் 6 Km தொலைவில் உள்ள மந்திகை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்கள். காயப்பட்டவர்கள் 1 மாதம் வரையில் கூட இருந்து சிகிச்சை பெற்றார்கள்.

2. 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் இரண்டாந் திகதி (August 02, 1989) இந்தியப் படை அணி ஒன்று மீது புலிகள் தாக்குதல் நடத்திவிட்டு ஒரு சில நிமிடங்களிலேயே தப்பிச் சென்றுவிட்டார்கள். அதன் பின்னர் சுற்றுப்புறங்களில் இருந்த முகாம்களில் இருந்து இந்தியப் படையினர் அழைக்கப்பட்டு வல்வெட்டித்துறை முற்றாக முற்றுகையிடப்பட்டுப் படுகொலைகள் ஆரம்பமாகின.

3. இரண்டாந் திகதி காலையில் ஆரம்பமாகிய படுகொலைகள் நான்காந் திகதி பிற்பகல் வரை தொடர்ந்தன.

வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள். இந்த இந்திய இராணுவவீரர்களுக்கு தலைமை தாங்கியது. முறையே மேஜர் சுதர்சன் சிங், கப்டன் கோபாலகிருஸ்ன மேனன் ,கப்டன் கபூர் என்போராவார். இவர்களை எதிர் கொண்டு புலிகள் நடத்திய தாக்குதலில் 9 சீக்கிய சிப்பாய்கள் கொல்லப்பட ஆயுதம் தாங்கியபுலிகளை அழிக்க திராணியற்ற இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது திட்டமிட்ட வெறியாட்டத்தினை தொடங்கியது.

ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர்.  யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை.  வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.

  • 63 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும், உயிருடன் கயிற்றால் கட்டி தெருத்தெருவாக இழுத்தும் கொல்லப்பட்டிருந்தனர்.   (இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடு இன்றி)
  • 100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.
  • 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.
  • 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.
  • வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது, பல ஆயிரக்கணக்கான நூல்கள். தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி, நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.
  • 176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.
  • வல்வெட்டித்துறை சிவன் கோயில், வல்வை முத்துமாரி அம்மன் கோயில், கப்பலுடையவர் கோயில், ஆதி கோயில், உட்பட பத்துக்கு மேற்பட்ட வணக்க ஸ்தலங்கள் எரியூட்டப்பட்டன.

எங்கும் சடலங்கள், அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள், காயமடைந்த, கொல்லப்பட்ட உறவினர்களின் அவலக்குரல்கள்.

சந்தைப்பகுதியில் சுடப்பட்டவர்கள் சாகும் தருவாயில் தண்ணீர் என கேட்டபொழுது, அருகில் இருந்த தேங்காய்களை உடைத்து இளநீரை கொடுத்த மக்கள், கொல்லப்பட்டு 3 நாட்களான ஊன் கரைந்து ஓடிக்கொண்டிருந்த ஊதி பெருத்த உயிரற்ற உடல்களில் தமது உறவுகளின் உடலை தேடிய சொந்தங்கள், ஊரவர்களே மரண பயங்களுடன் அந்தந்த இடங்களிலேயே எவ்வித இறுதி நிகழ்வுகளும் இன்றி புதைத்தும், எரியூட்டிடப்பட்டதுமான அநாதரவான உடல்கள்.

காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் ரண வடுவாக அச்சம்பவம் இருந்து வருகிறது.  ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர்.

வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை.  இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?

முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச்செய்தி வந்தது.

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.  இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன.  தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை.

வல்வெட்டித்துறை மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய இராணுவம் புரிந்த கொலைகள், கொள்ளைகள், பாலியல் கொடுமைகள், சித்திரவதைகள், வீடழிப்பு, சொத்தழிப்பு போன்றவற்றை சந்தித்தே இருக்கின்றனர்.  உண்மை சிலருக்கு சுடலாம் ஆனால் இவை என்றும் மறைந்துவிடாது மக்களின் மனங்களில் இருந்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்தும்.!

இது பற்றி வல்வை படுகொலை எனும் நூல் வல்வை ஆனந்தராஜா அவர்களால் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்து ஆவணப்படுத்தப்பட்டது குறிபிடக்தக்கது.

வல்வைப் படுகொலையில் பலியானோர் விபரம்

பெயர் வயது முகவரி
திரு வெ. சுப்பிரமணியம் 60 வித்தனை வல்வெட்டித்துறை
திரு அ.இளையபெருமாள் 70 வைகுண்டம் வல்வெட்டித்துறை
திருமதி இ.புஸ்பராணி 49 சிவபுரவீதி வல்வெட்டித்துறை
செல்வன் இ.யவனராஜ் 11 சிவபுரவீதி வல்வெட்டித்துறை
திரு எஸ். கணேசலிங்கம் 33 மதவடி வல்வெட்டித்துறை
செல்வி சசி கணேசலிங்கம் 1.5 மதவடி வல்வெட்டித்துறை
திருமதி அமிர்தம் உமாதேவி 26 வைகுண்டம் வல்வெட்டித்துறை
திருமதி ஈ.ராஜலட்சுமி 32 தீருவில் வல்வெட்டித்துறை
செல்வன் ஆ.சுந்தரேஸ்வரன் 11 வித்தனை வல்வெட்டித்துறை
திரு.ஆ.இராமச்சந்திரன் 41 காட்டுவளவு வல்வெட்டித்துறை
திரு க.சிவநேசராசா 36 தீருவில் வல்வெட்டித்துறை
திரு பொ. ரஞ்சித்குமார் 25 சந்தி வல்வெட்டித்துறை
திரு ந.ரவீந்திரன் 32 தீருவில் வல்வெட்டித்துறை
திரு க.மகேந்திரராஜா 49 புட்டணி வல்வெட்டித்துறை
திரு க.வேலும்மயிலும் 42 புட்டணி வல்வெட்டித்துறை
திரு இ.நடராசா 62 பருத்தித்துறை
திரு வி.அருள்சோதி 28 பருத்தித்துறை
திரு இ.இராசரத்தினம் 34 சிவன் கோவிலடி வல்வெட்டித்துறை
திருமதி சிவபாக்கியம் 45 நெடியகாடு வல்வெட்டித்துறை
திரு தங்கராசா 60 பாலாவி வல்வெட்டித்துறை
திரு பா. பிரேம்ராஜ் 22 தீருவில் வல்வெட்டித்துறை
திரு சு.உமாசங்கர் 19 காட்டுவளவு வல்வெட்டித்துறை
திரு த.ரவிச்சந்திரன் 28 காட்டுவளவு வல்வெட்டித்துறை
திரு செ.மயில்வாகனம் 55 வேம்படி வல்வெட்டித்துறை
திரு த.நாகதாஸ் 28 வேம்படி வல்வெட்டித்துறை
செல்வன் பா.மகேந்திரதாஸ் 16 வேம்படி வல்வெட்டித்துறை
திரு ஆர்.நவரட்ணம் 29 ஓடக்கரை பருத்தித்துறை
திரு சி.தம்பித்துரை 62 சிவகுருவித்தியாசாலை வீதி, வல்வெட்டித்துறை
திரு அ.ரவீந்திரன் 20 மதவடி வல்வெட்டித்துறை
செல்வி நா.பவப்பிருந்தா 15 நாவலடி உடுப்பிட்டி
செல்வி இ.உமாராணி 19 வைகுண்டம் வல்வெட்டித்துறை
செல்வன் அ.சுவர்ணதாஸ் 18 மானாங்கானை வல்வெட்டித்துறை
செல்வன் கு.செல்வானந்தவேல் 18 தீருவில் வல்வெட்டித்துறை
திரு கு.சண்முகவடிவேல் 36 காட்டுவளவு வல்வெட்டித்துறை
திரு செல்வன் கந்தன் 30 கெருடாவில் தொண்டைமானாறு
திரு சு. அமுதன் மார்க்கண்டன் 29 வித்தனை வல்வெட்டித்துறை
திரு பி.சண்முகலிங்கம் 43 தீருவில் வல்வெட்டித்துறை
திரு பொ.காளிதாஸ் 25 அம்மன்கோவிலடி வல்வெட்டித்துறை
திரு ந.பானுகோபால் 23 அம்மன்கோவிலடி வல்வெட்டித்துறை
திருமதி செ.சிவமணி 35 குடியேற்றம் வல்வெட்டித்துறை
திருமதி பி.வி. கிருஸ்ணவதனா 33 உடையாமணல் வல்வெட்டித்துறை
திருமதி ந. நல்லமுத்து 70 வேவில் வல்வெட்டித்துறை
திருமதி இ.ராசசேகரம் 20 கம்பர்மலை வல்வெட்டித்துறை
திரு ச.துரைராசா 59 இமையாணன் உடுப்பிட்டி
திரு வி.முரளிதரன் 20 குடியேற்றம் பொலிகண்டி
திரு சோ.ரமேஸ்குமார் 18 குடியேற்றம் பொலிகண்டி
திரு செ சக்திவேல் 23 காளிகோவில் வல்வெட்டித்துறை
திரு பொ.இராசேந்திரம் 23 ஆதிகோவிலடி வல்வெட்டித்துறை
திரு எஸ்.பாலச்சந்திரமூர்த்தி 31 மதவடி வல்வெட்டித்துறை
திரு நா.நாகராசா 23 ஊறணி வல்வெட்டித்துறை
திரு வே.செல்வச்சந்திரன் 26 கொத்தியால் வல்வெட்டித்துறை
திரு பொ.சத்தியரூபன் 23 முல்லைத்தீவு
திரு சி.சிவலிங்கம் 49 மானாங்கானை, பொலிகண்டி
செல்வன் த.சிவகுமார் 19 சிவபுரவீதி வல்வெட்டித்துறை
செல்வன் த.ஜெயமோகன் 16 சிவபுரவீதி வல்வெட்டித்துறை
செல்வன் த.சாம்பசிவம் 18 சிவபுரவீதி வல்வெட்டித்துறை
செல்வன் ஆ.பரம்சோதி 17 வித்தனை வல்வெட்டித்துறை
திரு ஆ.பராசர் 19 வித்தனை வல்வெட்டித்துறை
செல்வன் சு.பேரின்பம் 18 பாலாவி பொலிகண்டி
செல்வன் யோகராசா 18 கம்பர்மலை வல்வெட்டித்துறை
செல்வன் நா.சிவகுமார் 18 கம்பர்மலை தெற்கு, உடுப்பிட்டி
செல்வன் அ.மதிவர்ணன் 17 கம்பர்மலை வல்வெட்டித்துறை (காணவில்லை)

David Housego reported in the London Financial Times on 17 August 1989:

“… On Tuesday I was the first western reporter to visit Valvettiturai, a small coastal town near Jaffna, where Indian troops carried out reprisals on August 2 after the Tamil Tigers, the Tamil guerrilla movement, ambushed one of their patrols close to the main square, killing six Indian soldiers and wounding several, others.

After 41/2 hours of walking around the town and questioning many people, it becomes clear that angered soldiers deliberately shot dead unarmed, civilians, burnt a large number of houses, and brutally. beat many of the boys and men they caught.

The local Citizens Committee has identified 52 bodies and says that over 120 houses were burnt – making it by far the worst atrocity alleged against Indian troops in the two years they have been in Sri Lanka.

Most of the killings took place in the hours after the ambush, but the burning and ransacking continued , for another two days while Valvettiturai was under curfew and surrounded by Indian troops.

What is also certain is that the official Indian explanation for the deaths – that civilians were caught in crossfire in the wake of the ambush – has no credibility. Mr. S. Selvendra, the president of the Citizens Committee and a chartered accountant, is calling for a public inquiry.

Almost a fortnight after the event, a smell of charred remains hangs over Velvettiturai. Of the 15,000 people perhaps half have left in fear or despair. Many who remain are distraught over the loss of relatives or belongings, and uncertain how to begin again or where. What seems to have happened an August 2 is that two patrols of Indian Peace keeping Force (IPKF) troops about 30 men in all approached the centre of the town on foot in parallel columns at about 11.15 in the morning. This was market time, when the streets were most crowded. They were ambushed by firing from the roof and the street. Six soldiers were killed and 13 injured, including an officer…

What follows are abbreviated eyewitness’ accounts of four particular incidents that occurred after the ambush.

Mr N Senthivadivel, 50, was in his photographer’s shop overlooking the square when the firing began. He threw himself to the ground. Later he was taken out and made to sit cross legged with about 25 people on the square. From there he saw soldiers set fire to some of the shops and throw kerosene to add to the flames.

At about 2pm a soldier came along and said in broken English that he was going to shoot them. Two jeeps arrived and firing began. The soldier then turned round to those seated and fired on them. Two people, Mrs K Sivapackiyam, a washerwoman, and Mr K Thangarajah were killed and 10 more injured.

S Rajeswary, 52, is the wife of the head of the divisional land survey office. After the firing about 50 people sought shelter in her house well over 200 yards from the square – because it has a concrete roof and thus offers protection against shelling.

About 1.30pm, four soldiers broke into the house. She came out of the kitchen into the hall with her husband; they were holding their hands up. She pleaded with her husband not to step forward but he advanced to speak to the soldiers. They shot him. They then called for the other men and shot four of them.

After that they sprayed bullets killing four more people and injuring nine. Apart from her husband, Mrs. Rajeswary also lost her eldest son, 28, who was trapped in his shop which had been set on fire.

Mr A R Sivaguru., 68, a retired postmaster. With some 70 other people – he took shelter in the house of Mr Sivaganesh which also has a concrete roof. About 4pm, some six soldiers climbed over the back wall of the house and entered the courtyard. Women fell it their feet crying and pleading with them not to shoot but were kicked aside.

A sergeant then separated off the young men ages ranging from 18-35 and told them to sit in front of the cow shed next to the house. The soldiers then fired on them, killing four. When one woman screamed at her husband’s death she was told to be silent otherwise she would be killed.

Mr Nadarajah Anantharaj, principal of a local school and secretary of the Citizen’s Committee, still bears the mark on his face of wounds he received. This account of his treatment at the Udupiddy IPKP camp nearby is taken from his sworn affidavit. “There (at the camp) I saw many people who came along with me bleeding and crying. Four Sikh soldiers then started beating me with heavy wooden rods and with their fists.

“One soldier dashed my head against the wall One soldier pressed a wooden rod on my throat and was standing on the rod which was preventing my breathing. At that time I heard a voice shouting “Kill him, kill him.” I was almost losing consciousness when I managed to push the rod on my throat away, toppling the person who was standing on it .

“The next day, the Commanding Officer of Vadamaradchi (region), Brigadier Shankar Prasad, the Deputy Commander, Col Aujla, and the Udupiddy Commanding Officer, Colonel Sharma, met me and expressed their apologies … The Brigadier told me I had been ill-treated by mistake . . .” …..

.Why did the Indians respond so brutally? Part of the answer is that their troops have been under great strain in the Vadamaratchi region, with isolate patrols coming under and the Tigers firing rockets into the IPKF camp. This has left officers and men with nerves on edge.

Were the killings and the brutality the result of soldiers running amok or did they have the approval of their officers? With substantial reinforcements brought into Velvettiturai in the wake of the ambush, officers were certainly present in the town during the shooting and the burning of homes. Some inhabitants believe that senior officers gave their tacit approval to the reprisals, if not more.

One of my informants claimed that he had heard a senior officer say in anger not long before “I will burn Point Pedro” (a neighbouring town where there has also been trouble). “I will kill everybody.’ This may have been ill chosen words of intimidation not meant literally…”

லண்டனில் இருந்து வெளிவரும் the sunday telegraph நாளிதழ் வெளியிட்ட ஆசிரிய தலையங்கம்.

.editorial The sunday telegraph 13.08.89

over 50 tamil civilians, including women and children appear to have been murdered in raid on a village by indiantroops who were originally sent to sri lanka to restore peace.so india joins the melancholy list powers which,though democratic and based on the rule of law, have not always prevented a breakdown of moral restraint among their armed forces serving abroad.it is indias My Lai or perhaps it is hear amritsar

from Nehru onwards india’s leaders have lectured the world about how to behave but,if anything this massacre is worse than My Lai . then American troopas simply ran amok in the Sri Lankan village, the Indians seem to have been more systematic;the victims being forced to lie down, and then shot in the back. yet India would long have
had us believe that such horrors are largely perpetrated by western powers with imperialist antecedents.

such horrors accur when troops are cooped up in a situation ahich looks likely to have no solution or end, and have themselves been the victim of terrorist atrocities. post colonial indians, then, are no different from the rest of humanity.the massacre does not mean that India’s policical system is any less democratic and legally-based than did My Laiof America’s . but we await the naming by New Delhi of the Indian version of Lieutenant gallery, the American officer in command at My Lai,and his punishment