கல்கரியில் இரண்டு வீடுகளில் மூன்றுபேர் சடலமாக மீட்பு!

கல்கரி நகரில் ஒரே பகுதியில் இரண்டு வீடுகளில் மூன்றுபேர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று முற்பகல் 11 மணியளவில் கல்கரி நகரின் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள வீடுகளில் மொதம் 3 சடலங்கள் மீட்கப்பட்டன.

Applevillage Court பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலமும், Hidden Valley Driveவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ஒரு பெண்ணினதும், ஒரு ஆணினதும் என்று இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர், இநத இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளதாக தோன்றுவதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் உயிரிழந்த இருவரும் ஒருவரை ஒருவர் ஏற்கனவே அறிந்தவர்களா என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை இந்தச் சம்பவங்கள் இடம்பெற்ற வீடுகளில் ஒன்றிலிருந்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.