ரொறன்ரோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி!

ரொறன்ரோ பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த யூலை மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், 10 வயது சிறுமி மற்றும் 18 வயது யுவதி ஒருவரும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கடந்த நாட்களாக மலர் அஞ்சலி மற்றும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) குறித்த பகுதிக்கு பிரதமர் அவரது சகோதரருடன் சென்றிருந்தார்.

இதன் போது அவர்களுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தியிருந்ததுடன், அண்மைய நாட்களாக குறித்த பகுதியில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டிருந்தார்.

மேலும், குறித்த விபத்தியில் உயிரிழந்த 18 வயது பெண்ணின் இறுதி சடங்கில் பிரதமர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.