சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்டில் (near Charlottetown Airport) சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விமானம் பெம்ப்ரூக்,  ஒன்ராறியோவில் (Pembroke, Ontario)  இருந்து புறப்பட்டு, செல்ல வேண்டிய இடம்வரையில எந்தவித கோளாறுகளும் இன்றிப் பயணித்த போதிலும், தரையிறங்கும் போது ஓடுபாதைக்கு அருகே வீழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் 3 பேர் பயணித்த நிலையில் அவர்கள் சம்பவத்தின் போதே உயிரிழந்துவிட்டதை அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர் உறுதிப்படு்தப்பட்டுள்ளனர்.

கனடாவின் எல்லைப் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கனடாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையினர் இந்த விபத்துக் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.