5 நாட்களாக காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி : உதவி கோரும் தாயார்

15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிட்னி லக்ஹானி எனப்படும் அந்த சிறுமியை கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்ட் யோர்க்கின் Cosburn avenue மற்றும் Coxwell avenue பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணியளவில் கடைசியாக அவர் காணப்பட்டதாகவும், அதன்பின்னர் அவரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தனது செல்லப்பிராணியான நாயுடன் அவர் நடைபயிற்சிக்கு சென்றிருந்த நிலையிலேயே வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ள அவரின் தாயார், தனது மகள் ரொரன்ரோ பெரும்பாகத்தின் ஏதாவது ஒரு இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதுடன், அதனால் அவரைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை இவரைத் தேடும் நடவடிக்கையில் காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சிறுமி தொடர்பில் ஏதாவது தகவல் அறிந்தோர் 416-808-5400 அல்லது 416-808-5500 என்ற இலக்கத்தில் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.