மேயர் பதவிக்கு போட்டியிடும் பற்றிக் பிரவுண்!

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவரான பற்றிக் பிரவுண், மேயர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.


எதிர்வரும் பிரம்ரன் நகர மேயர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த அவர், தற்போது தனது பெயரை பிரம்ரன் நகர சபைக்கு சென்று பதிவுசெய்துள்ளார்.

அவர் எதிர்வரும் பிரம்ரன் நகர மேயர் பதவிக்கான தேர்தலில், பிரம்ரன் மேயர் லின்டா ஜெவ்ரியை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைவராக இருந்த பற்றிக் பிரவுண் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை அடுத்து அந்த பதவியிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.