பாதியாக குறையுமா ரொரன்ரோ நகரசபை?

ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் நகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைப்பங்காக குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

குறிப்பாக ரொரன்ரோ மாநகரசபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதன்போது தெரிவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ள 47 உறுப்பினர்களின் எண்ணிக்கையை, 25ஆக குறைப்பது முதல்வர் டக் ஃபோர்ட்டின் திட்டமாக உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் டக் ஃபோர்ட்டின் இந்த திட்டம் குறித்த தகவல்கள் நேற்று இரவு வெளியானதுடன், இன்று காலை 9 மணிக்கு Queen’s Parkகில் அவர் அறிவித்தல் ஒன்றினை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட்டின் இந்த திட்டம் தொடர்பில், ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிடுகின்றார்.

ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட்டின் இந்த திட்டம் தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களும், விமர்சனங்களும் ஏற்பட்டுள்ள நிலையிலேயே, ரொரன்ரோ நகரபிதா முக்கிய அறிவிப்பு ஒன்றினை விடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.15 அளவில் ரொரன்ரோ நகர மண்டபத்தில் ஊடக மாநாடு ஒன்றுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த சந்திப்பில் இந்த விடயம் குறித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.