மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்தில் நகரசபை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் தனது விண்ணப்பத்தை யுவனீதா நாதன் மீளப்பெற்றுள்ளார்

மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்தில் நகரசபை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் தனது விண்ணப்பத்தை யுவனீதா நாதன் (Juanita Nathan) இன்று மீளப்பெற்றுள்ளார். கடந்த எட்டு வருடங்களாக தான் வகித்த வந்த மார்க்கம் நகரசபையின் 7ம், 8ம் வட்டார கல்விச் சபை அறங்காவலருக்கான பதவிக்கு மீண்டும் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார் என ஊடகங்களுக்கு இன்று தெரியப்படுத்தியுள்ளார்.

கடந்த மூன்று தவணைகளாக நகரசபை உறுப்பினராக இருந்து பின்னர் மாகாண சபை உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிபெற்ற திரு லோகன் கணபதி அவர்கள் இடத்துக்கு இம்முறை இதுவரை 7 தமிழர்கள் போட்டியில் குதித்துள்ள நிலையில், தமிழர் வாக்குக்கள் இம்முறை சிதறடிக்கப்பட்டு தமிழருக்கான வெற்றிவாய்ப்பு மிகக்குறைவாக உள்ளநிலையிலேயே யுவனீதா நாதன் அவர்களின் இந்த முடிவு வந்துள்ளது.

யுவனீதா நாதன் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை

After a lot of thought and consultation with family, friends and supporters, I have decided to continue to serve the residents of Ward 7 and 8 in City of Markham as the Public School Board Trustee.

Earlier today, I withdrew my intent to stand for Councillor for Ward 7 and submitted my intention to seek re-election for Trustee. Over the last 8 years, I have had the honour of working with dedicated staff, students and their families to continue to deliver quality public education. With your support, I look forward to continue building on the accomplishments with a focus on equity, inclusion, parent engagement, and supporting vibrant communities around our schools.

Thank you for your continued support and encouragement. I look forward to engaging and serving you.

Sincerely,
Juanita Nathan

எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து மார்க்கம் நகரசபையின் 7ம் வட் டாரத்தில் கவுன்சிலர் பதவிக்காகப் போட்டியிடும் விண்ணப்பத்தை மீளப்பெறுவதெனத் தீர்மானித்துள்ளேன்.

மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்தில் கவுன்சிலர் தேர்தலில் நான் மேற்கொண்ட விண்ணப்பத்தை மீளப்பெறும் முடிவை மிகவும் கனத்த மனதோடு தான் எடுக்க வேண்டியிருக்கிறது. இது தொகுதியில் ஏற்கெனவே பல தமிழர்கள் போட்டியிடுவதனால் எங்களது ஆதரவு வாக்குகள் பிரிக்கப்பட்டு ஒரு தமிழரல்லாதார் தேர்வு செய்யப்படும் சந்தர்ப்பத்துக்கு நான் காரணியாக இருக்கக் கூடாது என்ற ஒரே நோக்கமே எனது இந்த முடிவுக்கு காரணம். இதனால் எனது பல ஆதரவாளர்களினதும் நண்பர்களினதும் மனங்களை புண்படுத்தியிருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன்.

கடந்த எட்டு வருடங்களாக நான் மார்க்கம் நகரசபையின் 7ம், 8ம் வட்டார கல்விஸ்ச் சபை அறங்காவலராக நான் பணியாற்றி வருகிறேன். அப்போது கல்விச் சபையின் பணியாளர்கள், மாணவர், பெற்றோர் என்று பல் தரப்போடும் இணைந்து செயற்பட்டு தரமான கல்வியை எமது சமூகத்துக்கு வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். உங்கள் ஆதரவோடு அப் பதவியைத் தொடர்ந்தும் வகித்து எனது சேவையைத் தொடர இது ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்போடு நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.

உங்கள் ஆதரவைத் தொடர்ந்தும் எதிர்பார்த்து…

நன்றியுடன்
யுவனீதா நாதன்.