மார்க்கம் – 7ஆவது வட்டாரத்திற்கான 7ஆவது தமிழ் பெண் வேட்பாளர் களத்தில்

வரும் அக்டோபர் மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள நகரசபை தேர்தலில் மார்க்கம் நகரசபையின் 7ஆவது வட்டாரத்திற்கான 7ஆவது தமிழ் பெண் வேட்பாளர் களத்தில்.

மார்க்கம் நகரசபையின் 7ஆவது வட்டாரத்திற்கான நகரசபை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் கீர்த்திகா லோகன் கணபதி (Kethika Logan Kanapathi) போட்டியிடுகின்றார். ஏற்கனவே இந்தத் தொகுதியில் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக பதிவு செய்துள்ள நிலையில் கீர்த்திகா லோகன் கணபதி ஏழாவது வேட்பாளராக தனது ‌பெயரைப் பதிவு செய்துள்ளார்.

இந்தத் தொகுதியில் இவரது தந்தையான லோகன் கணபதி கடந்த மூன்று தவணைகளாக நகரசபை உறுப்பினராக இருந்து பின்னர் மாகாண சபை உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.