மார்க்கம் நகரசபையின் 5ஆவது வட்டார நகரசபை பதவிக்கு ஸ்ரீ சிவசுப்ரமணியம் போட்டி

வரும் அக்டோபர் மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள நகரசபை தேர்தலில் மார்க்கம் நகரசபையின் 5ஆவது வட்டாரத்திற்கான நகரசபை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை இத்தொகுதியில் வசிக்கும் சமூகசேவகரும், கனடாவில் தமிழ் ஊடகத்துறையில் பலவருடகாலமாக சேவையாற்றியவருமான ஸ்ரீஸ்கந்தகுமார் சிவசுப்ரமணியம் (TVI/CMR ஸ்ரீ அண்ணா) அவர்கள் இத்தொகுதிக்கான தனது வேட்பு மனுவை இன்று (ஜூலை 26, 2018) பதிவு செய்துள்ளார்.

இத்தொகுதியில் போட்டியிடும் ஒரே ஒரு தமிழர் ஸ்ரீஸ்கந்தகுமார் சிவசுப்ரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல் சமூகத்தினர் வாழும் இத்தொகுதியில் பல்லினத்தவரும் தேர்தலில் போட்டியிடும் நிலையில் முழுத்தமிழர்களின் ஆதரவையும் இவர் பெறுமிடத்து இத்தொகுதி ஒரு தமிழ் நகரசபை உறுப்பினருக்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாகவுள்ளது.

திரு ஸ்ரீஸ்கந்தகுமார் சிவசுப்ரமணியம் அவர்கள் 2001 இல் சிறப்பு பண்பலை CTR வானொலியின் தொடங்கிய இவரது ஊடக பயணம், 2003/2004 காலப்பகுதியில் முதன் முதலில் தமிழர்களுக்கு என்று ஆரம்பிக்கப்பட்ட 24 மணி நேர தமிழ் தொலைக்காட்சி TVI, மற்றும் 2004 தமிழருக்கான பண்பலை வானொலி CMR ஆகியவற்றின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராவார்.  இதன் ஆரம்பத்துக்கும், அதன் உண்மையான வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டவர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்களில் ஸ்ரீஸ்கந்தகுமார் சிவசுப்ரமணியம் ஒருவராவார்.  (பின்னாளில் வந்தவர்கள் அதை தமதாக்கிப் போனது வேறு கதை).

இவருடைய வெற்றிக்கு ToronotTamil தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது .