20 வயது பெண் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

ரிச்மண்ட் ஹில் பகுதியில் 20 வயது பெண் ஒருவர் மரணம் தொடர்பில் சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 20 வயதுடைய அலிஸ்ஸா லைட்ஸ்டோன் என்பவர் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 2:30 மணியளவில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 25 வயதுடையவர் என்றும், இவர் 2 கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசரணைகளை யோர்க் பிராந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.