பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத் தீ: 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றம்!

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றமையால் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளில் இருந்து மக்களை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சுமார் 7 இடங்களில் தீப்பிடித்து எரிகின்றதாகவும் இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டுத் தீ வேகமாக பரவுவதால் வீடுகளுக்கு செல்லும் மின்சார மார்க்கத்திலும் பல பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அங்கு பெருமளவிலான திராட்சை தோட்டங்கள் உள்ள நிலையில் அவற்றினை காட்டுத் தீயில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படை வீரர்கள ஹெலிகொப்டர்கள் மூலம் தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.