கனேடிய மத்திய அமைச்சரவை மாற்றம்: முழு விபரம்

2019 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலின்போது லிபரல் கட்சியினை தலைமையேற்று முன்னோக்கி வழிநடத்திச் செல்லும் வகையில் கனேடிய மத்திய அமைச்சரவையானது மாற்றப்பட்டுள்ளது.

அந்தவகையில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தலைமையில் நேற்று (புதன்கிழமை) புதிய மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டது. இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, புதிய பதவி நிலைகள் அறிவிக்கப்பட்டு அமைச்சரவை மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னைய அமைச்சரவைகளில் இருந்ததை போன்று, மூத்த உறுப்பினர்களுக்கும் பதவி நிலைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தை குறைக்கும் அமைச்சராக முன்னாள் ரொறன்ரோ தலைமை பொலிஸ் அதிகாரி Bill Blair நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள்,

 • Mary Ng – சிறு வணிகம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்
 • Filomena Tassi – சிரேஷ்ட அமைச்சர்
 • Jonathan Wilkinson – கடற்படை மற்றும் கனேடிய கடலோர காவற்படை அமைச்சர்
 • Pablo Rodriguez – பாரம்பரியம் மற்றும் பன்முக கலாசார அமைச்சர்

மேலும் முன்னர் அமைச்சராக இருந்து தற்போது வேறு அமைச்சு பதவி வழங்கப்பட்டவர்கள்,

 • Dominic LeBlanc – கடல் சார்ந்த சர்வதேச அரசாங்க விவகாரங்களுக்கான மற்றும் வட விவகார மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர்
 • Amarjeet Sohi  – இயற்கை வளங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர்
 • Carla Qualtrough – அரசாங்க சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர்
 • Jim Carr – சர்வதேச வர்த்தக விரிவாக்கம் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர்
 • Mélanie Joly – சுற்றுலாத்துறை, பாரம்பரியம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்
 • François -Philippe Champagne – சர்வதேச வர்த்தகம் மற்றும் சமூகங்கள் அமைச்சர்
 • Scott Brison – கருவூல வாரிய தலைவர் டிஜிட்டல் அரச அமைச்சர்
 • Carolyn Bennett – சுதேச உறவுகள் அமைச்சர்
 • Bardish Chagger – சுற்றுலா மற்றும் சிறு வணிக அமைச்சர்

இந்த ஆண்டின் அரைப்பகுதி கடந்துள்ள நிலையில் இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில், புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள், தமது செயற்பாடுகளை எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் குறுகிய காலத்திற்குள் வேகமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.