315 மில்லியன் டொலர் செலவில் ஒன்ராறியோவில் புகையிரத விஸ்தரிப்பு

கனேடிய புகையிரத சேவை திணைக்களம் ஒன்ராறியோவில் 315 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ள நிலையில் ஒன்ராறியோவிற்கான புகையிரத போக்குவரத்து சேவைகளை மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளது.

தேசிய அளவில் 2018 ஆம் ஆண்டுக்கான முதலீட்டுச் செலவீனமான 3.4 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் இருந்து, ஒன்ராறியோவுக்கான இந்த 315 மில்லியன் டொலர்கள் மேம்பாட்டு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த 315 மில்லியன் டொலர் முதலீடுகள் ஒன்ராறியோ முழுவதுக்குமான புகையிரத போக்குவரத்து வலையமைப்பினை வலுப்படுத்தும் வகையிலும், விரிவாக்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கனேடிய தேசிய புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த திட்டத்தினால் ரொறன்ரோ வடமேற்கே அமைந்துள்ள மிகப் பெரிய புகையிரத நிலையமும், பிரம்டன் புகையிரத நிலையம் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மேலதிகமாக 145 கிலோமீட்டர் தூரத்திற்கு 3 இலட்சம் 80 ஆயிரம் புகையிரத பாதைகள் மாற்றி அமைக்கப்படவுள்ளதாகவும், 60 புகையிரத பாதைக் கடவைகள் திருத்தம், பாலங்கள், மதகுகள், சமிக்கை விளக்குகள் உள்ளிட்ட உட்கட்டுமானங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.